உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பிக்கலாம்

இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம்: இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு திட்டத்தில்ஆள்சேர்ப்பு தேர்விற்கு ஆன்-லைனில் ஜூலை 28 க்குள்விண்ணப்பிக்கலாம். ஆட்கள் தேர்வு அக்.18 முதல்நடைபெறவுள்ளது.இத்தேர்விற்கு 2004 ஜூலை 3 முதல் 2008 ஜன.,3க்குள் பிறந்து திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2, அதற்கு இணையான கல்வித்தகுதியுடன் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள்பெற்றிருக்க வேண்டும்.அரசால் அங்கீகரிக்கப்பட்டபாலிடெக்னிக் கல்லுாரியில் பொறியியல் மூன்றாண்டு பட்டயபடிப்புகளில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். இரண்டாண்டு தொழிற்கல்வி படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். ஆங்கிலப் பாடத்தில் 50சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு https://agnipathvayu.cdac.inஎன்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு ஜூலை 28க்குள் இளையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் எனகலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை