உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முகநுாலில் மத அவதுாறு பா.ஜ., நிர்வாகி கைது

முகநுாலில் மத அவதுாறு பா.ஜ., நிர்வாகி கைது

தொண்டி, : முகநுாலில் மத அவதுாறு பதிவேற்றம் செய்து தலைமறைவான ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை பா.ஜ., ஆன்மீக பிரிவு மாநில பொறுப்பாளர் குருஜி 35, கைது செய்யப்பட்டார்.தொண்டியைச் சேர்ந்த அகமதுபாய்ஸ் 47, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: குருஜி ஹிந்து, முஸ்லிம்கள் இடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் முகநுாலில் கருத்துகளை வெளியிட்டுள்ளார். குருஜி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார்.இதையடுத்து குருஜி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். அதைதொடர்ந்து தொண்டி போலீசார் விசாரித்து குருஜி மீது வழக்குபதிவு செய்தனர். தலைமறைவான குருஜியை நேற்று காலை காரைக்காலில் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை