மேலும் செய்திகள்
காவிரி குழாய் உடைப்பு குடிநீர் வீணாகிறது
28-Dec-2025
உதவி பேராசிரியர் தேர்வு 48 பேர் ஆப்சென்ட்
28-Dec-2025
ஏர்வாடி தர்கா புதிய வாசல் திறப்பு விழா
28-Dec-2025
ராமேஸ்வரம் : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடிக்காது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்குறுதி அளித்தார்.நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்களிடம் ஓட்டு சேகரித்த போது பேசியதாவது: இலங்கையில் சேதமடைந்துள்ள தமிழக மீனவர்களின் படகிற்கு நிவாரணமாக ரூ.5 கோடி அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு தராவிட்டாலும் நானும், அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா ஆகியோர் மடிப்பிச்சை ஏந்தி வசூலித்து கொடுப்போம்.இலங்கையால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் படகை சிறை பிடிக்க மாட்டார்கள். மேலும் கைதாகும் மீனவர்களுடன் படகுகளும் விடுவிக்கப்படும் என உறுதி அளிக்கிறேன் என்றார்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025