உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு புறவழிச்சாலை திட்டம்: l 7 கி.மீ.,க்கு அமைக்கும் நெடுஞ்சாலைத்துறையினர்

ராமேஸ்வரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு புறவழிச்சாலை திட்டம்: l 7 கி.மீ.,க்கு அமைக்கும் நெடுஞ்சாலைத்துறையினர்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.குறிப்பாக விடுமுறை நாட்கள், அமாவாசை, திருவிழா காலங்களில் ராமேஸ்வரம் சீதா தீர்த்த குளம் முதல்கோயில் மேற்கு வாசல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவாகனங்கள் ஊர்ந்தபடிசெல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு உரிய நேரத்திலும், உள்ளூர் மக்கள் பிற இடங்களுக்கும் விரைவாக செல்லமுடியாமல் சிரமப்படுகின்றனர். எனவேபோக்குவரத்துநெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என நகர மக்கள், பக்தர்கள்தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் பேக்கரும்பு அப்துல் கலாம் தேசிய நினைவகம் அருகில் துவங்கிராமர்பாதம் வழியாக அக்னி தீர்த்தம் செல்லும் வகையில் 7 கி.மீ.,ல் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலங்களைகையகப்படுத்தும் பணிகளுக்கு ரூ.62 கோடி ஒதுக்கப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும் எனநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை