உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்று பிரசாரம்  நிறைவு: ஓட்டு  வேட்டையில்  வேட்பாளர்கள்

இன்று பிரசாரம்  நிறைவு: ஓட்டு  வேட்டையில்  வேட்பாளர்கள்

ராமநாதபுரம், : லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று (ஏப்.17) மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறுவதால் அனைத்து பகுதிகளிலும் தீவிர ஓட்டு சேகரிப்பில் வேட்பாளர்கள்ஈடுபட்டுள்ளனர்.தமிழகம், புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் நாளை மறுநாள்(ஏப்.19) 40 தொகுதிகளில் நடக்கிறது.ராமநாதபுரம் லோக்சபாதொகுதியில் பா.ஜ., கூட்டணி, அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணி,நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என 25 பேர் போட்டியிடுகின்றனர். முன்னணி கட்சி வேட்பாளர்கள் கரக்காட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன், சில வேட்பாளர்கள்குத்தாட்டம் ஆடியும், வடை சுட்டும், விவசாயப்பணி செய்தும்ஓட்டு சேகரித்தனர்.நேற்றும் கட்சியினர், சுயேச்சைகள் எனஒவ்வொரு தொகுதிகளிலும் ஆட்டோ, வேனில் வீடு வீடாகஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். இன்று (ஏப்.17) மாலை 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுவதால்கிளை நிர்வாகிகள்,மகளிரணி, இளைஞரணியினரை களத்தில் இறக்கி அனைத்து பகுதிகளில் தீவிரமாக ஓட்டு சேகரிக்கவேட்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி