மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
14 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
14 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
14 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
14 hour(s) ago
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் நகருக்குள், நுழைய கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கோவில், தனுஷ்கோடி வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியரின் வாகனங்களுக்கு ராமேஸ்வரம் நகராட்சி டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலிக்கிறது. கார், வேனுக்கு 100, லாரிக்கு 150, அரசு பஸ்சுக்கு 8 ரூபாய் வசூலிக்கின்றனர். டெண்டர் விடப்பட்டு வசூல் நடந்து வந்தது. கடந்த இரு ஆண்டுகளாக நகராட்சி நேரடியாக வசூலித்தது. ஆனால் தனியாருக்கு விட்ட ஏலத் தொகையை விட, கடந்த இரு ஆண்டுகளாக கட்டண வசூல் குறைந்தது. டோல்கேட் வசூலில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதை தடுக்க பாஸ்டேக் அறிமுகப்படுத்துவதற்கு நகராட்சி முடிவு செய்தது. அதன்படி, நேற்று சோதனை முறையில் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஓரிரு நாளில் டோல்கேட்டில் பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்படும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
சாலையில் செல்லும் வாகனங்களுக்கு ஏற்கனவே பல இடங்களில் டோல்கேட் அமைக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் போன்ற நகரங்களில் நுழைவுக்கட்டணம் என பணம் வசூலிப்பது சரியா; இப்படி ஒவ்வொரு நகரத்திலும் நுழைவுக்கட்டணம். வசூலிக்க துவங்கினால் என்னாகும்... என பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் கேள்வி எழுப்புகின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago