| ADDED : ஜூன் 13, 2024 05:29 AM
பெரியபட்டினம்: ராமநாதபுரம் அருகேயுள்ள பெரியபட்டினத்திற்கு அரசு டவுன் பஸ்களால் நேர இடைவெளி இல்லாமல் ஒரே சமயத்தில் இயக்கப்படுவதால் பயணிகள் நீண்டநேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரத்தில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள பெரியபட்டினத்திற்கு செல்வதற்கு அரசு டவுன் பஸ் 4, 4 ஏ, பி, சி, டி, இ, எப்., உள்ளிட்ட 7 பஸ்கள் அதற்குரிய வழித்தடங்களில் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவது வழக்கம்.கடந்த பல மாதங்களாக ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டினம் வழித்தடத்தில் செல்லக்கூடிய டவுன் பஸ்கள் ஒன்று முதல் ஐந்து நிமிட இடைவெளியில் செல்கின்றன.ரெகுநாதபுரம் மற்றும் பெரியபட்டினம் பயணிகள் கூறியதாவது;காலை முதல் மாலை வரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் வரிசையாக அரசு டவுன் பஸ்கள் பெரியபட்டினம் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுகின்றன. டவுன் பஸ்களை நம்பி அடுத்தடுத்து வரக்கூடிய பயணிகள் நேரே இடைவெளியை பின்பற்ற முடியாமல் 30 நிமிடம் நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருக்கும் நிலையில் உள்ளது.எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் 7 பஸ்களையும் 15 நிமிடங்கள் இடைவெளியில் முறையாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.