உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மகசூல் நிலையை எட்டிய கோடை நெல் சாகுபடி

மகசூல் நிலையை எட்டிய கோடை நெல் சாகுபடி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடை நெல் விவசாயம் மகசூல் நிலையை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன பகுதிக்கு உட்பட்ட புலி வீரத்தேவன் கோட்டை, பொட்டக்கோட்டை, பிச்சனார் கோட்டை, இருதயபுரம், பெரியார் நகர், வல்லமடை உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த ஆண்டு நெல் அறுவடைக்கு பின் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்திருந்தனர்.அவ்வப்போது பெய்த கோடை மழை மற்றும் பெரிய கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீர் பயன் அளித்ததாலும், தற்போது சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மகசூல் நிலையை எட்டியுள்ளன.ஒரு சில பகுதிகளில் நெல் வயல்களில் ஈரப்பதம் இல்லாததால் பெரிய கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை ஆயில் மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கோடை சாகுபடியில் குறைந்த அளவு விவசாயிகள் மட்டுமே ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் வரும் ஆண்டுகளில் தண்ணீரை பயன்படுத்தி அதிகளவில் விவசாயிகள் கோடை சாகுபடியில் ஆர்வம் செலுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ