உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் குளத்தில் மிதந்த மீன்களால் பக்தர்கள் கவலை

கோயில் குளத்தில் மிதந்த மீன்களால் பக்தர்கள் கவலை

திருவாடானை: திருவெற்றியூர் கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பக்தர்கள் கவலைஅடைந்துள்ளனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் நாட்களிலும், சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் வெளி மாவட்டங்களிலிருந்து பல ஆயிரம் பக்தர்கள் வருவார்கள். இக்கோயிலில் முதல் நாள் இரவு தங்கியிருந்து மறுநாள் சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயில் முன்புள்ள மண்டபத்தில் தங்கியிருந்து மறுநாள் காலையில் தீர்த்தகுளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கோடை வெப்பத்தைதாக்குப்பிடிக்க முடியாமல் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. இறந்த மீன்களை காகங்கள் கொத்திச் செல்கின்றன. துர்நாற்றத்தால் குளத்து நீர் மாசடையும் சூழல் உள்ளது. எனவே, குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ