உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / த.மு.மு.க., நிர்வாகிகள் தேர்வு

த.மு.மு.க., நிர்வாகிகள் தேர்வு

தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே பனைக்குளத்தில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் கிளை நிர்வாகிகள் தேர்வு நடந்தது.மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சாதிக் பாட்ஷா முன்னிலை வகித்தார். இதில் மாநில தேர்தல் அதிகாரியும், மாநில அமைப்பு செயலாளருமான காதர் தேர்தல் நடத்தினார்.பனைக்குளம் கிளை த.மு.மு.க., தலைவராக முகமது அஸ்ரார், செயலாளராக ஆசிக், ம.ம.க., செயலாளராக பாஸித், பொருளாளராக ஹபீப் கமால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட நிர்வாகிகள் ஜாவித் அஸ்ஸாம், அகமது ஹசன், உபயத்துல்லா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை