| ADDED : மார் 28, 2024 10:52 PM
பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சமூக நலச் சங்க 10 வது ஆண்டு மகா சபை கூட்டம் நடந்தது.தலைவர் கங்காதரன் தலைமை வகித்தார். சவுராஷ்டிரா சபை தலைவர் கோவிந்தன், சங்க முன்னாள் தலைவர்கள் ராஜன், யோகைய்யன், மாருதிராமன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ரமேஷ் வரவு, செலவு கணக்குகளை வாசித்தார்.விழாவில் கலைஞர் எழுதுகோல் விருது பெற்ற மூத்த பத்திரிகையாளர் மதுரை சாமி, கல்வி மற்றும் சமூக சேவையாளர் ராமசுப்பிரமணியன், சேக்கிழார் விருது பெற்ற பெருமாள், ஆன்மிகம் மற்றும் சமூக சேவையாளர் பிரகாஷ் குமார் உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா நடந்தது.பரமக்குடி சவுராஷ்ட்ரா சபை தலைவர் மாதவன், சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி ரெங்காச்சாரி, கைத்தறி பெடரேஷன் சங்க செயலாளர் கோதண்டராமன் உள்ளிட்டோர் வாழ்த்தினார்கள். சங்க பொருளாளர் சசிகுமார் நன்றி கூறினார்.