| ADDED : ஆக 16, 2024 03:52 AM
கீழக்கரை: ராமநாதபுரம் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆக.25 காலை 9:00 மணிக்கு மகாகவி பாரதியாரின் 103 வது நினைவு நாள் போட்டிகள் நடக்கிறது. பள்ளி தாளாளர் ஜெகதீஸ்வரன் கூறியதாவது:ராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில் ஆக.25ல் பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான மாறுவேடப் போட்டி, பாடல் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, கவிதை போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.போட்டியில் பங்கேற்க மாணவர்களை பங்கேற்க செய்வதற்கு கல்லுாரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களை கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்ள ஒரு பள்ளி மற்றும் கல்லுாரியில் இருந்து இரு மாணவர்களை அனுப்பி வைக்கலாம். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பு நிலையில் தேர்ச்சி பெறும் மூன்று மாணவர்களுக்கு பரிசு பொருள்கள், பாராட்டு சான்றிதழ் செப்.15 காலை ராமநாதபுரம் அரவிந்த அரங்கத்தில் நடைபெறும் பாரதியார் விழாவில் வழங்கப்படும்.அதன்படி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மாறுவேடப் போட்டி, 6 முதல் 8ம் வகுப்புக்கு பாடல் போட்டி, 9 முதல் 10ம் வகுப்புகளுக்கு கட்டுரைப் போட்டி, பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பேச்சுப்போட்டி, கல்லுாரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடக்க உள்ளது என்றார்.----