உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 37 அலைபேசிகள் ஒப்படைப்பு 

37 அலைபேசிகள் ஒப்படைப்பு 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் 3 மாதங்களில் திருடப்பட்ட 37 அலைபேசிகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.கேணிக்கரை பகுதியில் உள்ளவர்களிடம் திருடப்பட்ட அலைபேசிகள் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்த அலைபேசிகளை சி.இ.ஐ.ஆர்., என்ற வெப்சைட் மூலம் அலைபேசியின் ஐ.எம்.இ., நம்பர், போலீஸ் ஸ்டேஷன் சி.எஸ்.ஆர்., காப்பி, அலைபேசியின் பில், ஆதார் கார்டு இதில் ஏதாவது ஒன்றை வெப்சைட்டில் ஏற்றி சம்பந்தப்பட்ட அலைபேசியை லாக் செய்ய முடியும். லாக் ஆன பின்பு போலீசாருக்கு குறுஞ்செய்தி வரும். இதனை வைத்து அலைபேசிகளை மீட்டுள்ளனர். ரூ.7.20 லட்சம் மதிப்புள்ள 37 அலைபேசிகள் மீட்கப்பட்டு அதனை உரியவர்களிடம் சந்தீஷ் எஸ்.பி., ஒப்படைத்தார். அலைபேசியை தொலைத்தவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை