உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறுதானிய சிற்றுண்டி உணவகம் திறப்பு விழா 

சிறுதானிய சிற்றுண்டி உணவகம் திறப்பு விழா 

ராமநாதபுரம், : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் திறக்கப்பட்டுள்ளது.கலெக்டர் விஷ்ணு சந்திரன் உணவகத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இங்கு சிறு தானியங்களான தினை பாயாசம், தினைமுறுக்கு, வரகு முறுக்கு, ராகி மிக்சர், தினை லட்டு, கம்பு லட்டு மற்றும் நெய் கொழுக்கட்டை, பட்டாணி சுண்டல், பனை ஓலை வரகு பிரியாணி, சிறுதானிய சப்பாத்தி, இட்லி, மூலிகை சூப், சோளப் பணியாரம் விற்கப்படுகிறது.உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பான், உதவி திட்ட அலுவலர் அரவிந்தன், மாவட்ட வழங்கல் விற்பனை சங்க மேலாளர் தங்கபாண்டியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை