உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பன்னீர்செல்வம் தேர்தல் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க கூட்டணியில் ஆர்வம்

பன்னீர்செல்வம் தேர்தல் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க கூட்டணியில் ஆர்வம்

திருப்புல்லாணி, : ராமநாதபுரம் லோக்சபா தொகுதி பா.ஜ.,வுக்கு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையுடன் நிர்வாகிகள் கடுமையாக வேலை செய்தனர்.இந்நிலையில் புதிய திருப்பமாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு பா.ஜ., கூட்டணியில் ஒதுக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனிக்கு சரியான போட்டியாக இருக்க வேண்டும் என்ற முனைப்போடு பா.ஜ.,வினர் துரிதமாக வேலை செய்கின்றனர்.இந்நிலையில் பன்னீர்செல்வத்திற்கு சுயேச்சை வேட்பாளர் என்ற முறையில் தனி சின்னம் கிடைக்கும் பட்சத்தில் அதை சமூக வலைதளங்களிலும் பல்வேறு பிரசார யுக்திகளைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள் உள்ள நிலையில் தி.மு.க., கூட்டணிக்கு பெரும் சவால் அளிக்கும் வகையில் சின்னத்தை பதிய வைக்க வேண்டும் என்ற முயற்சியில் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.பன்னீர்செல்வம் தரப்பினர் பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர். கோஷ்டிகளை மறந்து ஒற்றுமையாக இருந்து புதிய சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் முயற்சியில் பா.ஜ.,வினர் தீவிரம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை