உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் கராத்தே பயிற்சி நிறைவு விழா

ராமேஸ்வரத்தில் கராத்தே பயிற்சி நிறைவு விழா

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் ஜிசின் சோடோ கராத்தே பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.கராத்தே பள்ளியின் பயிற்றுநர் முருகன் தலைமை வகித்தார். மாணவர்கள் கராத்தே கலை குறித்து செய்து காட்டினர். பின் மாணவர்களுக்கு சென்னை சோட்டோகான் கராத்தே பயிற்சி பள்ளி பயிற்றுநர் சிவா, கராத்தே பயிற்றுநர்கள் சீனிவாசன், ராஜ்குமார் ஆகியோர் சான்றிதழ் மற்றும் மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம் ஆகிய கலரில் பட்டயம் (பெல்ட்) வழங்கினர். விழாவில் ராமேஸ்வரம் நகராட்சி துணைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை