உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மடத்தாகுளம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு; போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு

மடத்தாகுளம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு; போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு

சாயல்குடி : சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சி மடத்தாக்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததால் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.மடத்தாகுளம் கிராமத்தில் 250 குடும்பங்கள் வசிக்கின்றனர். 2021ல் தி.மு.க., தேர்தல் அறிக்கையின் போது சொல்லப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படாததால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். மடத்தாகுளம் கிராம நிர்வாகி குணாளன் கூறியதாவது:மடத்தாக்குளம் கிராமத்தில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும். நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் சர்வே எண்: 116 நிலத்திற்கு இலவச பட்டா வழங்க வேண்டும். புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க வேண்டும்.அவசரகால மருத்துவ உதவி மையம் அல்லது துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும். ஆக்கிரமிப்பு செய்த நிலம் மீட்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்ற வேண்டும். விவசாய நீராதாரத்தை அழிக்க அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களை அப்புறப்படுத்த வேண்டும்.ஊருணியை மீட்டு குடிமராமத்து செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தேர்தல் காலங்களில் நிறைவேற்றப்படும் என வேட்பாளர்கள் கூறுகின்றனர். தற்போது வரை நிறைவேற்றப்படாமல் கானல் நீராகவே உள்ளது.எனவே தேர்தல் முடிந்த பிறகு எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். வருவாய்த்துறையினர், போலீசார், மாரியூர் ஊராட்சி நிர்வாகம் இணைந்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தா விட்டால் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை