உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டில் திரியும் கால்நடைகள்; கண்கொள்ளாத அதிகாரிகள்

ரோட்டில் திரியும் கால்நடைகள்; கண்கொள்ளாத அதிகாரிகள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர், புறநகர் ரோடுகள், கலெக்டர் அலுவலக வளாகத்திலும் கால்நடைகள் கண்டபடி திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்துக்களும் நடக்கிறது. இவற்றை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.ராமநாதபுரம் நகர், மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. நெடுஞ்சாலைகள், நகர், புறநகர் உட்புற ரோடுகளில் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் திரிகின்றன. குறிப்பாக வீடுகளில் வளர்க்க வேண்டிய மாடுகளை மேய்ச்சலுக்காக ரோட்டில் விடுகின்றனர்.கலெக்டர் அலுவலக வளாகம் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் இடமாகவே மாறிவிட்டது. கால்நடைகள் நடுரோட்டில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். இவ்விஷயத்தில் கலெக்டர் உத்தரவிட்டாலும் உள்ளாட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை பெயரளவில் உள்ளது. அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை என மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி