உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே கீரனுாரை சேர்ந்த ராஜேந்திரன் 61. சென்னையில் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்தி வருகிறார்.முதுகுளத்தூர்- கமுதி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு டூவீலரில் சென்றார். அப்போது முதுகுளத்துாரை சேர்ந்த குமார், ஏனாதி பழனிச்சாமி இருவரும் முதுகுளத்துார் நோக்கி அதிவேகமாக ஒரே டூவீலரில் வந்தபோது ராஜேந்திரன் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதினர். இதில் காயமடைந்த ராஜேந்திரன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார். முதுகுளததுார் எஸ்.ஐ., சத்யா விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்