| ADDED : ஜூன் 03, 2024 02:55 AM
பரமக்குடி: மலேசியாவில் நடந்த சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், பரமக்குடி மாணவர்கள் 2 தங்கம் உட்பட 4 பதக்கங்கள் வென்றுள்ளனர்.மலேசியாவில் அந்நாட்டு சிலம்பம் கழகம் மற்றும் இன்டர்நேஷனல் சிலம்பம் பெடரேஷன் இணைந்து சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டிகள் மே 25 முதல் 27 நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, துபாய், கத்தார், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பரமக்குடி சக்தி சிலம்பம் மற்றும் யோகா அகாடமி மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் 7 முதல் 9 வயது, 37 முதல் 43 கிலோ தனித்திறன் போட்டி, நேரடி கம்பு சண்டை போட்டியில் மாணவன் அல்மிர்பசிர் 2 தங்கம் வென்று முதலிடம் பெற்றார். சப் ஜூனியர் பெண்கள் பிரிவு தனித் திறனில், தீபிக்சா வெள்ளி வென்று 2ம் இடம் பெற்றார். மேலும் 10 முதல் 12 வயது சீனியர் போட்டியில் விஜயவிகாஷ் 3 ம் இடம் பெற்று வெண்கலம் பெற்றார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியன், செயலாளர் தில்லைகுமரன், பொருளாளர் முத்துராமன், சங்க உறுப்பினர்கள், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.