உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி : பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து அரசாணை 56ன் படி 1146 கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யு.ஜி.சி., பரிந்துரைத்த மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் ஜன., 2019 முதல் வழங்க வேண்டும். அரசாணை எண் 56 க்கு எதிராக அரசு மேல் முறையீடு செய்த வழக்கை திரும்ப பெற வேண்டும். ஏப்., மற்றும் ஜூன் மாதம் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ