உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி குழாயில் தொடர் உடைப்பு நிரந்தர தீர்வு காண மக்கள் கோரிக்கை

காவிரி குழாயில் தொடர் உடைப்பு நிரந்தர தீர்வு காண மக்கள் கோரிக்கை

முதுகுளத்துார்: -முதுகுளத்துார்- - கமுதி ரோட்டில் தொடர்ந்து காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வருவதால் குடிநீர் வீணாவது மட்டுமின்றி ரோடும் சேதமடைகிறது.முதுகுளத்துார் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் ராட்சத குழாய் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. முதுகுளத்துார் -- கமுதி ரோட்டில் தொடர்ந்து காவிரி குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த லிங்கம் கூறியதாவது:முதுகுளத்துார் - -கமுதி ரோட்டோரத்தில் செல்லும் காவிரி குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் வீணாகிறது. முதுகுளத்துார்- - கமுதி செல்லும் முக்கியமான ரோடு என்பதால் வாகனங்கள் அதிகமாக செல்வதால் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டு ரோடு சேதமடைகிறது.தெருவிற்கு செல்லும் குடிநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி வருகிறது. குழாய் உடைப்பு குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிவரும் நாட்களில் காவிரி குழாய் உடைப்பு ஏற்படாமல் இருக்கவும், ரோடு பராமரிப்பு பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி