மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
5 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
5 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
5 hour(s) ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.காத்தாகுளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதுகுளத்துார் துணை மின் நிலையத்திலிருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. காத்தாகுளம் கிராமத்தில் கண்மாய் கரை அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. தற்போது டிரான்ஸ்பார்மர் மின்கம்பம் சேதமடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் டிரான்ஸ்பார்மர் அருகே நடந்து செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago