உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளியில் சுகாதார வளாகங்களை மேம்படுத்த மக்கள் வலியுறுத்தல்

பள்ளியில் சுகாதார வளாகங்களை மேம்படுத்த மக்கள் வலியுறுத்தல்

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் சுகாதார வளாகங்களை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.பரமக்குடியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், சி.பி.எஸ்.சி., பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 10ல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பள்ளிகளில் துாய்மை மற்றும் கட்டமைப்பு வசதிகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பலவற்றிலும் சுகாதாரவளாகங்கள் முறைப் படுத்தாமல் உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுகாதார வளாகங்களை கட்டமைக்க வேண்டும்.ஆனால் பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தும் நிர்வாகிகள் அவர்களுக்கான குடிநீர் மற்றும் சுகாதார வளாகங்கள் என மேம்படுத்தாமல் உள்ளனர். எனவே மாணவர்களின் நலனை கருதி சுகாதார வளாக கட்டமைப்பை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை