உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நவநீத கிருஷ்ணனாக முத்துபல்லக்கில் பெருமாள்

நவநீத கிருஷ்ணனாக முத்துபல்லக்கில் பெருமாள்

இன்று காலை ஆடி தேரோட்டம்பரமக்குடி: -பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் முத்து பல்லக்கில் நவநீத கிருஷ்ணனாக பெருமாள் வீதி உலா வந்தார்.பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவின் 8ம் நாள் விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு பெருமாள் முத்துப் பல்லக்கில் தவழும் கண்ணன் திருக்கோலத்தில் நவநீத கிருஷ்ணனாக அலங்காரம் ஆகினார்.அப்போது மயில் இறகு கொண்டையில் சூடி, வெள்ளி குடம் ஏந்தி, ஆண்டாள் கிளி மாலையை அணிந்து உலா வந்தார். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக மதியம் 3:00 மணிக்கு வைகை ஆற்றில் மண்டகப்படியை அடைந்தார்.அங்கு இரவு சிறப்பு தீபாராதனைக்கு பின் 11:00 மணிக்கு மேல் குதிரை வாகனத்தில் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகினார். பின்னர் இரவு அங்கிருந்து புறப்பாடாகி அதிகாலை திருக்கோயிலை அடைந்தார். மேலும் இன்று காலை 10:00 மணிக்கு ஆடித் தேரில் ரத வீதிகளில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வலம் வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி