உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திம்மநாதபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்; ரூ.15.28 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திம்மநாதபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்; ரூ.15.28 லட்சம் நலத்திட்ட உதவிகள்

பெருநாழி : பெருநாழி அருகே திம்மநாதபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கலெக்டர் கூறியதாவது:மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் தோறும் மக்கள் தொகை திட்ட முகாம்கள் நடக்கின்றன. அந்த வகையில் 15 நாட்களுக்கு முன்பு கமுதி ஒன்றியம் திம்மநாதபுரம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு சுற்றுவட்டார கிராம மக்களிடம் கோரிக்கைகள் குறித்து 240 மனுக்கள் பெறப்பட்டன. 194 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.தற்போது 164 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 194 பேருக்கு ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பரமக்குடி சப-கலெக்டர் அபிலாஷா கவுர், உதவி கலெக்டர் முகமது இர்பான், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி, ஊராட்சி தலைவி முத்துமாரி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி