உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர்

ராமேஸ்வரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர்.தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் சூறாவளியாக வீசுவதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை ராமேஸ்வரத்தில் திடீரென பெய்த மழையால் கோயில் கிழக்கு தெற்கு ரத வீதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நகராட்சி அலுவலகம் முன்பு மழை நீர் தேங்கியது.மேலும் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 50 மீ.,க்கு மழை நீர் தேங்கி குளம் போல் மாறியது. இதன் வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது கழிவு நீர் கலந்த மழை நீரை பீய்ச்சியபடி சென்றதால் டூவீலர், ஆட்டோவில் சென்றவர்கள் மீது கழிவுநீர் விழுந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் பெரிதும் அவதிப்பட்டனர். எனவே தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்காதவாறு சாலை மட்டத்தை உயர்த்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி