உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயில் ஆனி பிரமோற்ஸவ விழா  கொடியேற்றம் 

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயில் ஆனி பிரமோற்ஸவ விழா  கொடியேற்றம் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்ட ராம சுவாமி கோயிலில் ஆனி பிரமோற்ஸவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.ராமநாதபுரம் சமஸ் தானத்திற்கு சொந்தமான கோதண்டராம சுவாமி கோயில் ஆனி பிரமோற்ஸவம் 10 நாட்கள் நடை பெறவுள்ளது.நேற்று காலை 10:40 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரம், தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இரவு தோளுக்கினியாள் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை பல்லக்கு, இரவு சிம்மம், கருடன், ஆஞ்சநேயர், சேஷ, குதிரை வாகனங்களில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது. ஜூலை 11ல் 6ம் திருநாளில் இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், 9வது நாளான ஜூலை 14ல் காலை 9:30 மணிக்கு ரதோற்ஸவம் நடக்கிறது.ஜூலை 15ல் காலை தீர்த்தோற்ஸவம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை திவான் பழனிவேல்பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை