உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட ரூ.4.56 கோடி தங்கம் பறிமுதல்; கீழக்கரையை சேர்ந்த 2 பேர் கைது

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட ரூ.4.56 கோடி தங்கம் பறிமுதல்; கீழக்கரையை சேர்ந்த 2 பேர் கைது

ராமநாதபுரம் : இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.4.56 கோடி மதிப்புள்ள 6 கிலோ 600 கிராம் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த மதுரை வருவாய் புலனாய்வுத் துறையினர் கீழக்கரையை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக மதுரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய் புலனாய்வுத்துறையினர் திருப்பாச்சேத்தி டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது காரில் வந்த இருவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்களது காரை சோதனையிட்ட போது 6 கிலோ 600 கிராம் தங்கம் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதும், கடத்தல்காரர்கள் கீழக்கரை ஓ.ஜே.எம்.தெருவை சேர்ந்த சேகுசாதிக் 44, சங்குகுளிக்கார தெருவை சேர்ந்த சாதிக் அலி 45, என தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த வருவாய் புலனாய்வுத்துறையினர் தங்கம் யாருக்காக கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரிக்கின்றனர். இதன் மதிப்பு ரூ.4.56 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை