| ADDED : ஜூலை 09, 2024 04:50 AM
கமுதி: கமுதி அருகே கோட்டைமேடு தனி ஆயுதப்படை பயிற்சி மையத்தில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட கடலோர காவல்படை ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி முன்னிலை வகித்தார். பயிற்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 பேர், தஞ்சாவூர் 4, புதுக்கோட்டை 6 என 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சி மையத்தில் மாணவர்கள் ஆர்வமாக கற்று வருவதால் அதிகாரிகளும் சுலபமாக பயிற்சி அளிக்கின்றனர். இதுவே மாணவர்களுக்கு முதல் வெற்றி. இதே போல் பயிற்சியின் போது அரசுத் தேர்வுகள் மற்றும் போலீஸ் தேர்வுகளுக்கு தேவையான மெட்டீரியல் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும்.எனவே மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்று மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி கூறினார். இதில் கடலோர காவல் படை போலீசார், அதிகாரிகள், இளைஞர்கள் பங்கேற்றனர்.