உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வைகாசி பொங்கல் விழா மாட்டு வண்டி பந்தயம்

வைகாசி பொங்கல் விழா மாட்டு வண்டி பந்தயம்

சாயல்குடி : சாயல்குடி அருகே செவல்பட்டி கிராமத்தில் உள்ள வீரசக்கதேவி கோயிலில் வருடாந்திர வைகாசி பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. தேன் சிட்டு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயங்கள் நடந்தன. பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்காக 5 கி.மீ., மற்றும் 7 கி.மீ., பந்தய துாரம் நிர்ணயிக்கப்பட்டது. செவல்பட்டியில் இருந்து சாயல்குடி செல்லும் ரோட்டில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசும் குத்து விளக்கும் வழங்கப்பட்டது. வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட காளைகள் மாட்டு வண்டி பந்தயத்தில் பங்கேற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை