உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வி.ஏ.ஓ., வேலை வாங்கி தருவதாக ரூ.58 லட்சம் மோசடி செய்த பெண்

வி.ஏ.ஓ., வேலை வாங்கி தருவதாக ரூ.58 லட்சம் மோசடி செய்த பெண்

ராமநாதபுரம்: -வி.ஏ.ஓ., வேலை வாங்கித் தருவதாக ரூ.58 லட்சம் மோசடி செய்ததாக எஸ்.பி., சந்தீஷிடம் பெண் மீது மற்றொரு பெண் புகார் அளித்துள்ளார்.ராமநாதபுரம் அருகே தலைதோப்பு பகுதியை சேர்ந்த முருகானந்தம் மனைவி சுமதி. இவர் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:எனது உறவினரான பெண் ஒருவர் அதிகாரிகளை தெரியும். வி.ஏ.ஓ., வேலை வாங்கித் தருகிறேன் என்று 2021 ல் ரூ.13 லட்சம் பெற்றார். வேலை வாங்கித் தராததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது தன்னுடைய டிரஸ்ட் கணக்கில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும், அதனை மீட்க பணம் தேவைப்படுவதாக தெரிவித்தார்.இதன் காரணமாக எனது வீடு, அம்மாவின் வீடு எல்லாவற்றையும் அடகு வைத்து ரூ.45 லட்சம் கொடுத்தோம். ரூ. 58 லட்சம் பெற்றவர் பணத்தை திருப்பி தர மறுத்து ஏமாற்றியதோடு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி