உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வழக்கை திரும்ப பெற வி.சி.க., ஆர்ப்பாட்டம்

வழக்கை திரும்ப பெற வி.சி.க., ஆர்ப்பாட்டம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சாம்பக்குளம் ஊராட்சி இந்திரா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். மே 8ல் குழாயை சேதப்படுத்தி தண்ணீரை கொண்டு செல்ல மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்பினருக்கும்​ வாக்குவாதம் ஏற்பட்டது.கீழத்துாவல் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்தனர். இந்திராநகர் பெண்கள் உட்பட 13 பேர் மீதான வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று வி.சி.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில துணைச் செயலாளர்கள்​ வன்னிஅரசு, கலைவேந்தன், கனியமுதன் முன்னிலை வகித்தனர். கீழத்துாவல் போலீசார் வழக்கை திரும்ப பெறாவிட்டால் நீதிமன்றம் சென்று முயற்சி மேற்கொள்ளப்படும். போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றனர்.ஐந்திணை மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் தேவதாசு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை