உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உலக சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடுதல்

உலக சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடுதல்

ராமநாதபுரம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. அறக்கட்டளை தலைவரான தி.மு.க., மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் டாக்டர் முகமது சலாவுதீன்தலைமை வகித்தார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பத்மஸ்ரீ மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். மஞ்சப்பை வழங்கப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் ஆனந்தன், உதவிகோட்ட பொறியாளர் பிரேம் ஆனந்த், உதவி பொறியாளர் ராஜ்குமார், தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் இந்திரஜித்,கல்வியாளர் அப்துல் பாஷித், சாலை ஆய்வாளர் நடராஜன் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆனந்த், கிருஷ்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை