| ADDED : ஜன 25, 2024 05:07 AM
ராமநாதபுரம்; ஆடு மேய்த்தவரே 30 ஆடுகளைதிருடி விற்ற நிலையில் அவரையும், ஆடுகளை வாங்கியவரையும்போலீசார் கைது செய்தனர்.சாயல்குடி அருகே எம்.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அரியமுத்து 65. இவருக்கு சொந்தமான 1000 ஆடுகளை ராமநாதபுரம்காரேந்தல் பகுதியில் கிடை அமைத்து மேய்ச்சலுக்கு விட்டு வந்தார்.இந்த ஆடுகளை தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பூலாங்கொல்லை கிராமத்தைசேர்ந்த மணிகண்டன் 37, லட்சுமணன் 40, இருவரும் குடும்பத்துடன் தங்கிஆடுகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2022ல் செம்மறி ஆடுகள் அதிகளவில் காணாமல் போனது. இது குறித்து அந்தப்பகுதியில் உள்ள உறவினர்களிடம் தெரிவித்து கண்காணித்தார். அப்போது மணிகண்டன், லட்சுமணன் சேர்ந்து சரக்கு வாகனத்தில் 16 ஆடுகளை திருடி ஏற்றிய போதுகையும் களவுமாக பிடித்தனர். அரியமுத்து புகாரில் 5 பேர் மீது வழக்குப்பதிந்து மணிகண்டன், லட்சுமணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த லட்சுமணன், மணிகண்டன் மீண்டும் அரியமுத்துவிடம் ஆடு மேய்க்கும் பணிக்கு சேர்ந்தனர்.மீண்டும் 30 ஆடுகள் காணமல் போனது. இதில் மணிகண்டன், லட்சுமணன், சுரேஷ், ராமு ஆகியோர் சேர்ந்து திருடியது தெரிய வந்தது.அரியமுத்துபுகாரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிந்து லட்சுமணனை கைது செய்தனர்.விசாரணையில் சூரன்கோட்டை இளையராஜாவிடம் ஆடுகளை விற்பனை செய்ததுதெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.