உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  இலங்கையில் ரூ.400 கோடி ஹெராயின் 2 கை துப்பாக்கி பறிமுதல்: 6 பேர் கைது

 இலங்கையில் ரூ.400 கோடி ஹெராயின் 2 கை துப்பாக்கி பறிமுதல்: 6 பேர் கைது

ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்திச் சென்ற ரூ.400 கோடி மதிப்புள்ள ஹெராயின் பவுடர், ஐஸ் எனும் போதைப்பொருள் மற்றும் 2 கை துப்பாக்கிகளை கடற்படையினர் பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்தனர். இலங்கை தென்கடலில் மீன்பிடித்தது போல் பாசாங்கு செய்து இலங்கை தங்காலை துறைமுகத்தில் நேற்று முன்தினம் நிறுத்தப் பட்டிருந்த சந்தேகத்திற்குஉரிய ஒரு மீன்பிடி படகை இலங்கை கடற்படை வீரர்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் சோதனையிட்டனர். இதில் 300 கிலோ ஹெராயின் பவுடர், 100 கிலோ ஐஸ் எனும் போதைப்பொருள் மற்றும் இரு கை துப்பாக்கிகள் இருந்தன. அதனை பறிமுதல் செய்து படகில் இருந்த இலங்கை கடத்தல் காரர்கள் 6 பேரை கைது செய்து கொழும்பு சிறையில் அடைத்தனர். இந்த போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.400 கோடி. இதனை துாத்துக்குடி, கன்னியாகுமரி, கேரள பகுதியில் இருந்து படகில் கடத்தல்காரர்கள் கடத்தி வந்து இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த போதைப் பொருள், துப்பாக்கிகளை கடத்திச்சென்ற தமிழக, கேரள கடத்தல்காரர்கள் யார் என மத்திய, மாநில உளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை