உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி மாணவியை காதலித்து கடத்திய திருமணமான வாலிபர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை காதலித்து கடத்திய திருமணமான வாலிபர் போக்சோவில் கைது

ராமநாதபுரம்: -ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் பிளஸ் 2 மாணவியை காதலித்து கோவைக்கு கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வளையனேந்தல் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சரத்பாபு 25. எலக்ட்ரீஷியனான இவர் தற்போது ராமநாதபுரம் சூரன்கோட்டை காலனி வலம்புரி நகரில் குடியிருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.சரத்பாபு களத்தாவூர் பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்துள்ளார். 2023 டிச.29ல் பள்ளிக்கு சென்ற மாணவி அங்கு செல்லவில்லை. வீட்டிற்கும் திரும்பவில்லை. மகளைக் காணாத பெற்றோர் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணையில் கேணிக்கரை பகுதியில் மாணவியுடன் சரத்பாபு இருந்தது தெரிய வந்தது. மாணவியின் சைக்கிள், புத்தகப்பை கேணிக்கரை பகுதியில் மீட்கப்பட்டது. சரத்பாபுவுடன் சிறுமி சென்றதை உறுதி செய்தனர். இருவரும் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இருவரையும் அங்கிருந்து போலீசார் அழைத்து வந்து மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.சரத்பாபு மீது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை