| ADDED : ஜன 21, 2024 03:25 AM
பரமக்குடி: - முகநுால் நட்பால் கள்ளக்காதலில் விழுந்து கணவரை பிரிந்து காதலனுடன் வசித்த இரண்டு குழந்தைகளின் தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே முதுகுளத்துார் ஆனைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் 33. ஆத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சரிதா 28. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.ஆறுமுகம் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த நிலையில் சென்னை பெரம்பூரில் மனைவி சரிதா மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்தனர்.இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் முதுகுளத்துார் துாரி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் 29, என்பவருடன் முகநுாலில் சரிதா பழகி நண்பர்களாகி நெருங்கி பழகினர்.மூன்று மாதங்களுக்கு முன் சரிதா வீட்டில் இருந்த 10 பவுன் நகைகளுடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பரமக்குடி மணி நகரில் செல்வகுமாருடன் குடும்பம் நடத்தினார். ஆறுமுகம், மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என சென்னையில் போலீசில் புகார் அளித்துள்ளார். தற்கொலை
இதனிடையே சரிதாவிற்கும், செல்வகுமாருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சரிதா வீட்டில் தனியாக இருந்த போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது என பெற்றோர், உறவினர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேசி சமாதானப்படுத்தினர்.