உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தபால் அலுவலகங்களில் ஆதார் தைத் திருவிழா

தபால் அலுவலகங்களில் ஆதார் தைத் திருவிழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்ட தபால் துறை சார்பில் தபால் அலுவலகங்களில் ஆதார் தைத் திருவிழா என்ற பெயரில் சிறப்பு முகாம் நடக்கிறது. ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியிருப்பதாவது:தை மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு செய்த 31 தபால் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் தைத்திருவிழா பெயரில் ஜன.16 முதல் பிப்.2 வரை நடக்கிறது. ராமநாதபுரம், பரமக்குடி தலைமை தபால் அலுவலங்களில் முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஆதார் சேவை முகாம் நடக்கிறது. பொதுமக்கள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று பயன்பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை