உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சத்திரக்குடியில் திறக்கப்படாமல் வேளாண்மை விரிவாக்க மையம்

சத்திரக்குடியில் திறக்கப்படாமல் வேளாண்மை விரிவாக்க மையம்

5 ஆண்டாக ஆமை வேகத்தில் பணிகள் பரமக்குடி: -பரமக்குடி அருகே சத்திரக்குடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடக்கிறது.சத்திரக்குடி வட்டாரத்தில் ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயப் பணிகள் நடக்கிறது. இங்கு நெல், மிளகாய், பருத்தி, சிறுதானியங்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் என ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகள் தொடர்கிறது.இந்நிலையில் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இயங்குகிறது. இங்கு போதிய அளவில் இடம் இல்லாமல் உள்ளதுடன் கட்டடம் முற்றிலும் சேதம் அடைந்து இடியும் நிலையில் இருக்கிறது.தொடர்ந்து 2019 -20ஆம் ஆண்டில் ரூ.2 கோடியில் போகலுார் ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய கட்டட கட்டுமானப் பணிகள் துவங்கின. பணிகள் 2020 அக்.16 ல் துவங்கி 11 மாதங்களுக்குள் முடிவடைய வேண்டும். இங்கு சேமிப்பு கிடங்கு உட்பட அனைத்து வகையான வசதிகளுடன் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. பணிகள் ஆமை வேகத்தில் நடந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறப்பு விழா காணும் வகையில் பணிகள் நிறைவடைந்துள்ளன.இதன்படி 5 ஆண்டுகளாக கட்டடப் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் விவசாயிகள் பழைய கட்டடத்திலேயே செல்லும் நிலை உள்ளது. மேலும் அலுவலர்களும் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.பொருட்களை பாதுகாக்க முடியாமல் மழை நீர் கட்டடத்திற்குள் வடியும் நிலை உள்ளது. ஆகவே புதிய கட்ட டத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை