மேலும் செய்திகள்
கோயில் உண்டியல் உடைப்பு
5 minutes ago
அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் திறப்பு
5 minutes ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பா.ஜ., சார்பில் ஆர்.எஸ்.மங்கலத்தில் 125 நாள் வேலை திட்டம் குறித்த தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் வடிவேலன் தலைமை வகித்தார். மீனவர் பிரிவு மாவட்டத் தலைவர் சசிகனி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் முரளிதரன் பேசினார். 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்திய நிலையில் ஆளும் தி.மு.க., அரசு பொதுமக்களிடம் இத்திட்டம் மத்திய அரசால் நிறுத்தப்பட்டுள்ளதாக பொய் பரப்பி வருவதாக கட்சியினர் குற்றம் சாட்டினர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அமைதியாக போராடிய செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் அரசின் அடக்கு முறையால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஆத்மா கார்த்திக், கட்சி நிர்வாகிகள் சவுந்தர பாண்டியன், நம்புராஜன், பரமேஸ்வரன், கிஷோர் குமார், செல்லத்துரை, கணேசன், சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
5 minutes ago
5 minutes ago