உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  முதல்வர் அறிவித்தது ரூ.150 கோடி ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு

 முதல்வர் அறிவித்தது ரூ.150 கோடி ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே துாண்டில் வளைவு பாலம் அமைக்க முதல்வர் ரூ.150 கோடி அறிவித்தார். ஆனால் ரூ.139 கோடியில் பாலம் அமைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கச்சிமடம் ஊராட்சி வடக்கு கடற்கரையில் இயற்கை சீற்றங்களில் இருந்து படகுகளை பாதுகாக்க 1600 மீ.,க்கு ரூ.150 கோடியில் துாண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி 2 மாதங்களுக்கு முன்பு துாண்டில் வளைவு அமைக்கும் பணியை மீன்துறையினர் துவக்கினர். இதன்படி தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரை முதல் நாலுபனை மீனவ கிராம கடற்கரை வரை அமைக்க திட்டமிட்டிருந்தனர். இந்த துாரத்தை இரு பகுதிகளிலும் 350 மீட்டர் குறைத்து ரூ.139 கோடியில் 1250 மீ.,க்கு பாலம் அமைக்கின்றனர். பாலத்தின் நீளத்தை குறைப்பதால் நாலுபனை, மாந்தோப்பு மீனவர்கள் படகுகளை நிறுத்த முடியாமல் இயற்கை சீற்றத்தில் படகுகள் சேதமடையும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள், முதல்வர் உத்தரவுப்படி பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர் சங்க தலைவர் காரல் மார்க்ஸ் தலைமையில் நேற்று தங்கச்சிமடம் கடற்கரையில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை