| ADDED : டிச 25, 2025 05:30 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள சர்ச்சுகளில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சர்ச்சுகளில் கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்தனர். இயேசு கிறிஸ்து அவதரித்த டிச.,25ல் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். அதன்படி இன்று (டிச.,25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் ஸ்டார்களை தொங்க விட்டு சர்ச்சுகள், பள்ளிகளில் குடில்கள் அமைத்து கடந்த ஒரு வாரம் பிரார்த்தனை நடத்தினர். கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பேக்கரிகளில் ஸ்வீட், கேக் விற்பனை தீவிரமாக நடந்தது. மேலும் ரோட்டோர கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் தாத்தா முகமூடிகள் விற்பனை நடந்தது. ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை சர்ச், ரேமா சர்ச், சி.எஸ்.ஐ., சர்ச் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சுகளில் இரவு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.