உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓட்டுப்பதிவு மையங்களில் அடிப்படை வசதியை உறுதிசெய்ய கலெக்டர் உத்தரவு

ஓட்டுப்பதிவு மையங்களில் அடிப்படை வசதியை உறுதிசெய்ய கலெக்டர் உத்தரவு

ராமநாதபுரம் : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஓட்டுப்பதிவு மையங்களில் அடிப்படைவசதிகளை உறுதிசெய்ய கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தர விட்டுள்ளார்.ராமநாதபுரத்தில் ராஜா தினகர் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ஓட்டுப்பதிவு மையங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.அப்போது உட்கட்டமைப்பு வசதிகள், தேர்தல் நாள் அன்று ஓட்டுப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க வருகை தரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம், மக்களுக்கு தேவையான கழிப்பறை வசதிகள் போன்றவற்றை சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார். போதியளவு மின்சார வசதி, குடிநீர் வசதியினை வழங்கிட அலுவலர்கள் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ராமநாதபுரம் கமிஷனர் அஜிதா பர்வீன், தாசில்தார் சுவாமிநாதன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை