உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  திதி பூஜைக்கு ரூ.15 ஆயிரம் நெல்லை பக்தர் வேதனை

 திதி பூஜைக்கு ரூ.15 ஆயிரம் நெல்லை பக்தர் வேதனை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் திதி பூஜைக்கு ரூ.15 ஆயிரம் செலவாகும் எனக்கூறி ஆட்டோ டிரைவர் ஏமாற்றியதாக திருநெல்வேலி பக்தர் வேதனை தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் சித்தம்பள்ளியை சேர்ந்தவர் உத்தன் ராமன் 30. இவர் தனது பாட்டியின் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி பூஜை செய்து ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இரு நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் மனைவியுடன் வந்திறங்கினார். இங்கிருந்து ஆட்டோவில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்ற போது, கடல் சீற்றத்தால் புரோகிதர்கள் பூஜை செய்யவில்லை. ஆகையால் வேறு இடத்தில் புரோகிதர்கள் பூஜை செய்கின்றனர் என பொய் சொல்லி ஆட்டோ டிரைவர் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு வீட்டில் இருந்த புரோகிதர்கள் திதி பூஜைக்கு ரூ.15 ஆயிரம் செலவாகும் என கூறியுள்ளனர். இதனை உத்தன்ராமன் ஏற்க மறுக்கவே பேரம்பேசி ரூ.2000 வாங்கி உள்ளனர். பின் பக்தர், அக்னி தீர்த்த கரைக்கு வந்தபோது அங்கு புரோகிதர்கள் பூஜை செய்துள்ளனர். அங்கு ரூ.1000 கொடுத்து பூஜை செய்தார். இதையடுத்து தன்னை ஏமாற்றிய புரோகிதரிடம் ரூ. 2000த்தை திருப்பி கேட்டதற்கு தரக்குறைவாக பேசியதாக உத்தன்ராமன் வேதனையுடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இதையடுத்து உத்தன்ராமனை ஏமாற்றிய ஆட்டோ டிரைவர், அவமானப்படுத்திய புரோகிதர்கள் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்