| ADDED : மார் 20, 2024 12:15 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.தமிழகத்தில் மோசடி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு அதிக வட்டி, பணம் இரட்டிப்பு என ஆசை வார்த்தை காட்டி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து விட்டு மோசடி செய்வது ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பெண்களிடம் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ.,கள் சுபாஷ் சீனிவாசன், மாசானம், ஏட்டு ரகுராமன் ஆகியோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.இதில், ஆசைக் காட்டும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது. குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக சொல்வது, அதிகாரபூர்வமற்ற நிதி நிறுவனங்கள், பணசுழற்சித்திட்டங்களை நடத்துபவர்கள் பற்றிய தகவல் இருந்தால் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம், என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.-----