உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவனுாரில் நெற்பயிருக்கு உரமிடும் பணிகள் ஜரூர்

காவனுாரில் நெற்பயிருக்கு உரமிடும் பணிகள் ஜரூர்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனுாரில் பகுதியில் நெல் பயிர்களுக்கு உரமிடும் பணியை விவசாயிகள் மும்முரமாக நடக்கிறது.ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனுார், துத்தியேந்தல், நாகனேந்தல், அத்தானூர், மங்கலம், அளிந்திக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் தற்போது வளர்ச்சி பருவத்தை எட்டியுள்ளன. மேலும் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக அப்பகுதிகளில் உரமிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக களைக்கொல்லி மற்றும் பூச்சி நோய் மருந்துகள் தெளித்து நெல் பயிர்களை பாதுகாத்த நிலையில், தற்போது அடி உரமாக டி.ஏ.பி., வளர்ச்சிக்கு யூரியா உள்ளிட்ட உரங்களை கலந்து வயல்களில் விவசாயிகள் இட்டு வருகின்றனர். இதனால் வயல்வெளிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ