உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஆர்.எஸ்.மங்கலத்தில் வயல் தின விழா

 ஆர்.எஸ்.மங்கலத்தில் வயல் தின விழா

ஆர்.எஸ்.மங்கலம்: மாவட்ட அட்மா திட்டத்தில் ஆர்.எஸ். மங்கலம் வட்டார விவசாயிகள் கலந்தாய்வு மற்றும் வயல் தின விழா தொழில்நுட்ப பயிற்சி செவ்வாய்பேட்டை கிராமத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்ரியா முன்னிலை வகித்தார். நவீன நெல் தொழில்நுட்பங்கள், உயர் மகசூல் பெறும் முறைகள், மண் மேலாண்மை, நீர் சேமிப்பு மற்றும் உயிர் உரம் உள்ளிட்டவைகளின் முக்கியத்துவம் குறித்தும், அட்மா திட்டத்தில் பயனுள்ள தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்வது குறித்தும் வேளாண் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும் நெற்பயிரில் ஏற்படும் தண்டு மூட்டு துளைப்பூச்சி, இலைச்சுருட்டி, கலப்புத் துறை நோய் போன்றவற்றை பெரோமோன் குருதி, முட்டை பாராசிடாய்டு போன்ற முறைகளால் கட்டுப்படுத்தும் நுட்பங்கள் குறித்து விவரிக்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முருகானந்தம், ஆனந்த் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை