உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கால்நடைகளுக்கு கால், வாய்க்காணைநோய் தடுப்பூசி ; நாளை சிறப்பு முகாம் கால்நடைகளுக்கு கால், வாய்க்காணை நோய் தடுப்பூசி ; நாளை சிறப்பு முகாம்

கால்நடைகளுக்கு கால், வாய்க்காணைநோய் தடுப்பூசி ; நாளை சிறப்பு முகாம் கால்நடைகளுக்கு கால், வாய்க்காணை நோய் தடுப்பூசி ; நாளை சிறப்பு முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கால் மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் கிராமங்களில் நாளை( டிச.,29) முதல் 2026 ஜன., 28 வரையிலும் நடைபெற உள்ளது. கால் மற்றும் வாய்காணை நோயானது நாட்டினம் மற்றும் அயலின கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்நோயால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளின் சினைப் பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படுகிறது. எனவே கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய்காணை நோயை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் கால் மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 8வது சுற்று டிச.,29 முதல் 2026 ஜன., 28 வரையிலும் நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை அவர்களது கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு பயன் பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை