உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் பறக்கும் படையிடம் சிக்கிய இலவச சைக்கிள்: ஆவணங்களால் தப்பியது

ராமநாதபுரத்தில் பறக்கும் படையிடம் சிக்கிய இலவச சைக்கிள்: ஆவணங்களால் தப்பியது

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் இலவச சைக்கிள்கள் சிக்கியது. முறையாக பில் உட்பட ஆவணங்கள் இருந்ததால் தப்பியது.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குதற்காக ஆர்டர் செய்யப்பட்டிருந்த சைக்கிள்கள் பஞ்சாப் மாநிலம் லுதியானா சைக்கிள் கம்பெனியில் இருந்து கண்டெய்னரில் அனுப்பினர்.இதனை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையோரத்தில் நிறுத்தி கண்டெய்னரில் இருந்து பள்ளிகளுக்கு சரக்கு வாகனங்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.ஜனார்த்தனன் துணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும் படையினர் இலவச சைக்கிள்கள் எதற்காக வந்துள்ளது. யாருக்காக வந்துள்ளது, என விசாரித்தனர்.வாகனங்களில் இருந்த அனைத்துக்கும் பில், மற்றும் முறையான ஆவணங்கள் இருந்ததால் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஆண்டு தோறும் வழங்கும் திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை அறிந்த பின்னர்கண்டெய்னரை விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை